[X] Close

இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது

Youth-arrested-for-Misbehaving-with-women

சென்னையை அடுத்த தாம்பரத்தில் பயிற்சிக்கு வந்த இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாம்பரம் சேலையூர் கேம்ப் ரோட்டில் தனியார் கன்சல்டிங் நிறுவனத்தை நடத்தி வருபவர் கார்த்திக் ராஜா. வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவது, வேலைக்கான பயிற்சி போன்றவற்றை வழங்கிவரும் இந்த நிறுவனத்தில் 2 மாதங்களுக்கு முன் பொறியியல் பட்டதாரிப்பெண் ஒருவர் பயிற்சிக்காக சேர்ந்துள்ளார்.


Advertisement

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இந்தப் பெண்ணை ஆபாசப் படம் எடுத்த கார்த்திக் ராஜா, ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தராவிட்டால், ஆபாசப் படங்களை இணையதளத்தில் வெளியிடப்போவதாக மிரட்டியதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண், சேலையூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். பெண்கள் மீதான வன்கொடுமைச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கார்த்திக் ராஜாவை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close