[X] Close

”டிடிவி தினகரன் கனவு நிறைவேறாது” - அதிமுக

admk-twitter-about-ttv-dinakaran-stalin-meet

ஸ்டாலினோடு கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு அம்மாவின் ஆட்சியையும் கழகத்தையும் அழிக்கத்துடிக்கும் தினகரனின்
கனவு நிறைவேறாது என அதிமுக ட்வீட் செய்துள்ளது. 

மதுரையில் இருக்கும் நட்சத்திர விடுதியில் திமுக தலைவர் ஸ்டாலினும், அமமுக துணைப் பொதுச்செயலாலர் டிடிவி
தினகரனும் சந்தித்ததாக கூறி அதிமுக அமைச்சர் உதயக்குமார் பரபரப்பை கிளப்பினார். மேலும் இருவரின் சந்திப்புக்கு பிறகே
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு இல்லை என்ற அறிவிப்பை டிடிவி தினகரன் வெளியிட்டதாகவும்
உதயக்குமார் குற்றம் சாட்டினார்.  

இதற்கு டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்தார். ஓட்டலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தாலே உண்மை புலப்படும்
எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். 


Advertisement

இதையடுத்து ஒரு எதிர்க்கட்சி தலைவரோ அல்லது வேறு கட்சி தலைவரோ ஒரே விமானத்தில் போகக்கூடாதா? ஓட்டலில்
கூட தங்கக்கூடாதா? என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியிருந்தார்.  

இந்நிலையில், இதுகுறித்து அதிமுக ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது. அதில், 
”மாண்புமிகு அம்மா தன் ரத்தம் சிந்தி,தன் உடல் நிலையைக் கூட பாராமல் உயிர் கொடுத்து பெற்ற வெற்றியை,18 சட்டமன்ற
உறுப்பினர்களின் பதவியை ஸ்டாலினோடு கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு, தன் ஒருவருக்காக  இழக்க வைத்து,
அம்மாவின் ஆட்சியையும் கழகத்தையும் அழிக்கத்துடிக்கும் தினகரனின் கனவு நிறைவேறாது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close