ஹோண்டுராஸ் நாட்டில் போதையில் இருந்த இளைஞர் ஒருவர் சிங்கத்தின் கூண்டுக்குள் கையை நீட்டி பேசியுள்ளார். சிங்கம் பதிலுக்கு அந்த இளைஞரின் கையை கடித்து குதறியது.
பொதுவாக கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தை வெகு தூரத்தில் நின்று பார்த்தாலே பலருக்கும் பயமாக இருக்கும். காரணம் சிங்கத்தின் அத்தகைய வீரம். பிடரி மயிரும் அதன் நடையும் எவ்வளவு தைரியமான மனிதரையும் ஒரு சில நிமிடங்களில் பயம் கொள்ள செய்துவிடும். ஆனால் ஒருவர் மதுபோதையில் இருந்தால் உலக நடப்பெல்லாம் தெரியவா போகிறது.
குடித்துவிட்டால் சும்மா போகின்றவர்களை எல்லாம் தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பார்கள். அப்படி போதையில் இருந்த ஹோண்டுராஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கத்திடமே தனது சேட்டையை செய்ய சிங்கம் பதிலுக்கு தனது வேலையை வசமாக காட்டியுள்ளது.
தெகுசிகல்பா என்ற இடத்தில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு சென்ற இளைஞர் ஒருவர் குடி போதையில் கூண்டுக்குள் உள்ளே கையை நீட்டி சிங்கத்தை நோக்கி பேசியுள்ளார். சிறிதுநேரம் பொறுமையாக இருந்த சிங்கம், திடீரென பாய்ந்து அந்த இளைஞரின் கையைக் கடித்தது. ஒருவழியாக கூண்டுக்குள் இருந்து கையை ரத்தமும் வலியுடன் மீட்டுள்ளார். படுகாயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்