[X] Close

அதிக மதுபோதை: லண்டன் ஏர்போர்ட்டில் ஜப்பான் விமானி கைது!

Drunk-Japanese-pilot-arrested-at-Heathrow-Airport

அதிக மதுபோதையில் விமானத்தை இயக்க இருந்த ஜப்பான் விமானி, லண்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

லண்டனில் உள்ள ஹீத்ரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்படுகிறது. வழக்கம் போல இந்த விமானம் கடந்த சில நாட்களுக்கு முன், டோக்கியோவுக்கு புறப்படத் தயாராக இருந்தது.


Advertisement

50 நிமிடத்துக்கு முன் விமானத்தின் துணை விமானி, கட்ஷூடோஷி ஜிட்சுகாவா (42 வயது) மதுபோதையில் விமான நிலையத்துக்குள் வந்தார். அவர் வழக்கத்தை விட அதிக மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சோதித்து பார்த்தபோது, வழக்கமான அளவை விட, பத்து மடங்கு அவர் அதிகமாக மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ஜிட்சுகவாவின் தண்டனை வரும் 29-ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.


Advertisement

இதன் காரணமாக அந்த விமானம் 69 நிமிடங்கள் தாமதமாக கிளம்பி சென்றது. இதற்காக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் அதிக மதுபோதையில் விமானத்தை இயக்கியதாக கைது செய்யப்பட்ட பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானி ஜூலியனுக்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close