’பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்’ : மு.க.ஸ்டாலின் ட்விட்!

’பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்’ : மு.க.ஸ்டாலின் ட்விட்!
’பாஜகவை வீழ்த்த மாநில கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்’ : மு.க.ஸ்டாலின் ட்விட்!

பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ராகுலின் கருத்து முக்கியமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநில முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய ராகுல்காந்தி, நமது நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியுள்ளதாகவும் அதனால் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் இந்தியாவை பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் நாடு தற்போது இக்கட்டான நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு ஜனநாயகத்தின் தேவையே இது எனவும், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேச இருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுல் கூறிய கருத்து முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தேசத்தை பாதுகாக்க இது ஜனநாயக நிர்ப்பந்தம் என்று சந்திரபாபு நாயுடு கூறியதை வழிமொழிவதாகவும், மாநில சுயாட்சியை பறிக்கும் மத்திய பாஜக அரசை வீழ்த்த அனைத்து மாநில கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com