தீபாவளி பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதால் ஆட்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செட்டிபாளையம் பகுதியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை கூடும். இச்சந்தையில் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கொண்டுவரப்படும் ஆடுகளை நல்ல விலைக்கு விற்பது வழக்கம். இதனால் இச்சந்தை ஆடுகள் விற்பனைக் கூடாரமாக மாறியது. ஆகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் இச்சந்தை ஆடுகளை வாங்க குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்நோக்கியுள்ள தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சி விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் இன்று சந்தைக்கு அதிக அளவில் வந்திருந்தனர். காலை 3 மணியிலிருந்து 10 மணி வரை நீடித்த சந்தையில் சுமார் 5 கோடிக்கு மேல் ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் வழக்கமாக விற்கப்படுகின்ற விலையைக் காட்டிலும் வாரச்சந்தையில் ரூ 1000 முதல் 2000 வரை விற்பனை அதிகரித்து உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சந்தையில் இதுவரை சுமார் 50 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகி உள்ளதாகவும் மாடுகள் சுமார் 30 ஆயிரம் வரை விற்பனையாகி உள்ளதாகவும் வியாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் கொண்டு வந்த ஆடு, மாடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர். வியாபாரிகளுக்கு போதிய அளவு ஆடு, மாடுகள் கிடைக்காததால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ளதாக அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix