[X] Close

இந்திய அணி வீரர்களுக்கு மாட்டிறைச்சி வேண்டாம் - பிசிசிஐ

BCCI-asks-Cricket-Australia-to-remove-beef-from-Indian-team---s-menu

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் உணவுப்பட்டியலில் மாட்டிறைச்சியை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. 


Advertisement

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக டி20 போட்டிகள் தொடங்க உள்ளன. அடுத்ததாக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், மூன்று டி 20 கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் உணவுப்பட்டியலில் மாட்டிறைச்சியை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பட்டியலை பிசிசிஐ வெளியிட, அந்த பட்டியலில் மாட்டிறைச்சி பாஸ்தா இடம்பெற்றிருந்தது. 


Advertisement

இந்த உணவுப்பட்டியலை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. இந்த நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சியை தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தட்பவெப்பத்தில் மாட்டிறைச்சி உணவு என்பது உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் உணவுப்பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது உணவுக்கட்டுப்பாட்டில் தீவிரம் காட்டி வருவதாகவும், சைவம் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளவே அதிகம் விரும்புகின்றனர் என்பதாலும் அதனை கருத்தில் கொண்டு உணவுப்பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close