சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை

சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை
சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை

சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை வளசரவாக்கத்தில் வசித்துவரும் நடிகை நந்தினி, டி.வி தொடர்கள், திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருகிறார். நந்தினிக்கும் தியாகராய நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய கார்த்திக், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திக் அவரது மனைவி நந்தினி விவாகரத்துகோரி தொல்லை கொடுத்ததே தற்கொலைக்கு காரணம் என, கார்த்திக்கின் சகோதரி ரம்யா தெரிவித்தார். இந்நிலையில் முன்னதாக கார்த்திக் காதலித்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், தனது தற்கொலைக்கு நந்தினியின் தந்தையே காரணம் என கார்த்திக் கடிதம் எழுதி வைத்த‌ருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த விருகம்பாக்கம் போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com