
பலூனை வெடிக்கச்செய்து ரோஹித் சர்மாவை தோனி பயமுறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இப்போது விளையாடியது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது. 3-வது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. மும்பையில் நடந்த 4-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்திய அணி தொடரை வெல்லுமா அல்லது வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று டிரா செய்யுமா என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்னில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 14.5 ஓவரில் 105 ரன் எடுத்து தொடரை வென்றது.
இந்நிலையில் போட்டியின் வெற்றியை கொண்டாட்டம் இந்திய அணி வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் நடைபெற்றது. அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கேக்கை ரோஹித் சர்மா வெட்டினார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பலூனை வெடிக்கச்செய்து, ரோஹித்தை தோனி பயமுறுத்த அந்த இடமே கலகலப்பானது. கலகலப்பு அடங்குவதற்குள்ளேயே தான் வெட்டிய பெரிய சைஸ் கேக்கை கேதர் ஜாதவின் முகத்தில் பூசி அவரை மூச்சுமுட்ட வைத்தார் ரோஹித் சர்மா. இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Back at the team hotel after an early wrap and it is time to celebrate.