Published : 01,Nov 2018 02:13 PM

மேரி கோம் உடன் குத்துச்சண்டை போட்ட மத்திய அமைச்சர்: வீடியோ

Sports-minister-Rajyavardhan-Rathore-turns-temporary-sparring-partner-for-Mary-Kom

சர்வதேச குத்துச்சண்டை போட்டியை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு ஒலிம்பிக் வீராங்கனை மேரி கோம் நன்றி தெரிவித்துள்ளார். 

சர்வதேச குத்துச்சண்டை போட்டி வரும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இப்போட்டியை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், போட்டி நடைபெறும் இடமான இந்திரா காந்தி ஸ்டேடியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பார்வையிட்டார். 

அப்போது அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமை சந்தித்தார். மேலும் அவருடன் சிறிது நேரம் குத்துச்சண்டை பயிற்சியிலும் ஈடுபட்டார். விளையாட்டுத்துறை அமைச்சரின் இத்தகைய செயல் அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. 

இதுகுறித்த வீடியோவை வீராங்கனை மேரி கோம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு குத்துச்சண்டை போட்டியை ஊக்குவிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்