சென்னையில் திருநங்கைகளுக்காக தனி கழிப்பறை அமைக்கும்படி மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜ் என்பவர், திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை அமைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகள் பல இடங்களில் மறுக்கப்படுவதாகவும், தனிக்கழிப்பறை இல்லாததால் அவர்கள் சிரமத்துக்கு ஆளாவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி சீதாராமன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், சமூக நலத்துறை இயக்குநர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தண்டையார்பேட்டை, சைதாப்பேட்டை, சூளைமேடு, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில், திருநங்கைகளுக்கு தனிக்கழிப்பறை அமைக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கழிப்பறைகள் அமைக்கவும், அது தொடர்பாக சமூக நலத்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் அறிக்கை தாக்கல் செய்யவும் 4 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!