தீபாவளிக்கு வெடிக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையம் பசுமை வகை பட்டாசுகளை உருவாக்கியுள்ளது.
பண்டிகைகள் மற்றும் விழாக்காலங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது போல பசுமைப் பட்டாசுகள் என்று எதுவும் இல்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இந்தச் சூழலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையமான, சிஎஸ்ஐஆர் (CSIR)ஐ சேர்ந்த விஞ்ஞானிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பட்டாசுகளை உருவாக்கியுள்ளனர்.
தற்போது உள்ள பட்டாசுகளுடன் ஒப்பிடும் போது, இந்தப் பட்டாசுகள் குறைவான மாசுவை வெளியிடும் என இவற்றை அறிமுகம் செய்து வைத்து சுற்றுசூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். இந்த வகை பட்டாசுகள் உரிமம் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தீபாவளிக்கு விற்பனைக்கு வராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வாஸ், ஸ்டார், ஸஃபால் (SWAS, STAR, SAFAL) எனப் பெயரிடப்பட்ட மூன்று வகையான பசுமைப்பட்டாசுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் பேரியம், பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்டவற்றின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்த போது குறைந்த அளவிலான மாசு மற்றும் ஒலியையே இவை வெளியிட்டதாக அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். அதே வேளையில் தற்போதுள்ள பட்டாசுகளை உற்பத்தி செய்ய எவ்வளவு செலவாகுமோ, அதை விட 30 சதவிகிதம் வரை குறைவான செலவிலேயே புதிய வகை பட்டாசுகளை உற்பத்தி செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி