Published : 04,Apr 2017 05:39 AM
வட்டியை குறைத்தது எஸ்பிஐ

கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.
பேஸ் ரேட் எனப்படும் அடிப்படைக் கடன் வட்டி விகிதத்தை, 0.15 சதவிகிதம் குறைத்துள்ளது எஸ்பிஐ. இதையடுத்து வட்டி விகிதம் 9.10 சதவிகிதமாக குறைகிறது. இந்த வட்டிக் குறைப்பால் பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டுக்கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியவர்களுக்கு மாதாந்திர தவணைத் தொகை குறைய உள்ளது.
முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. குறைந்த பட்ச இருப்புத் தொகை எனும் சில கட்டுப்பாடுகளையும் எஸ்பிஐ கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.