குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு இந்தியா விடுத்துள்ள அழைப்பை அவர் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபராக இருந்த ஒபாமா கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் வரும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள கடந்த ஆகஸ்ட் மாதமே இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கடந்த ஆகஸ்ட் மாதம் கூறும்போது, “ குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவில்லை” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தியா விடுத்துள்ள அழைப்பை ட்ரம்ப் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ட்ரம்பின் பயண திட்ட விவரங்கள் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டுள்ளதால் வரும் ஜனவரி மாதம் அவர் இந்தியா செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை என அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இந்திய வெளிநாட்டு அமைச்சம் சார்பில் எந்த விளக்க அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறும்போது, அதிபரின் பயணத் திட்ட விவரங்கள் குறித்து வெள்ளை மாளிகை தான் தெரிவிக்க வேண்டும் என கூறிவிட்டது. ஈரான் மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ள நிலையில் இந்தியா தடையை மீறி கச்சா எண்ணெயை வாங்க திட்டமிட்டுள்ளது. இதுவும் இந்தியா விடுத்துள்ள அழைப்பை ட்ரம்ப் நிராகரிக்க காரணமாக சொல்லப்படுகிறது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்