Published : 28,Oct 2018 04:08 AM

நாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரம்.. உரிமையாளர் மீது கடும் தாக்குதல் (வீடியோ)

Dog-owner-attacked-in-chennai--cctv-footage

சென்னை நங்கநல்லூரில் வீட்டு வாசலில் நாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த உரிமையாளர் நாயை அழைத்து வந்த பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நங்கநல்லூரைச் சேர்ந்தவர் சுகுணா. இவர் தான் வளர்க்கும் நாயை அழைத்துக்கொண்டு நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது சக்தி என்பவரின் வீட்டு வாசலில் நாய் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சக்தி நாயை அழைத்து வந்த சுகுணாவை இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த சுகுணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய சக்தியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாய் சிறுநீர் கழித்ததால் உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம் ரங்நல்லூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்