தன்னை விட 12 வயது குறைந்த ஹீரோவை, நடிகை மலைக்கா அரோரா இரண்டாவதாக திருமணம் செய்கிறார்.
பிரபல இந்தி நடிகை, மலைக்கா அரோரா. மணிரத்னத்தின் ’உயிரே’ படத்தில் இடம்பெற்றுள்ள ’தக்க தைய்ய தைய்யா தைய்யா தைய்யா’ பாடலில் ஆடியவர் இவர். இவர் இந்தி ஹீரோ சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
நட்சத்திர தம்பதிகளான இவர்கள் வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். விவாகரத்து கேட்டு மும்பை பாந்திராவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார்.
தனியாக வசித்து வந்த மலைக்கா, டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் இவரும் பிரபல நடிகர் அர்ஜுன் கபூரும் காதலிக்கத் தொடங்கினர். ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வந்தனர். இது கிசு கிசுவாக வெளியானாலும் இருவரும் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை. அர்ஜுன் கபூர், சமீபத்தில் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மகன். அவரது முதல் மனைவிக்குப் பிறந்தவர்.
இந் நிலையில் மலைக்கா அரோராவும் அர்ஜுன் கபூரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
‘அவர்கள் காதலித்து வருவது உண்மைதான். அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள்’ என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால், மலைக்காவுக்கு வயது, 45. அர்ஜுனுக்கு வயது 33 !
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!