
பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது இல்லத்தில் சிறப்பு விருந்து அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஜப்பான் இடையேயான உச்சி மாநாட்டில் பங்கேற்கும் விதமாக இருநாள் அரசுமுறை பயணமாக வரும் 28ம் தேதி பிரதமர் மோடி ஜப்பான் செல்ல உள்ளார். அப்போது மோடிக்கு, பிரதமர் ஷின்சோ அபே தமது இல்லத்தில் நட்பு ரீதியாக விருந்து அளிக்க உள்ளார். இதனையடுத்து இரு தலைவர்களும் யமனாஷியில் இருந்து டோக்யோ வரையில் 110 கிலோமீட்டர் தூரம் ரயிலில் பயணிக்க உள்ளனர்.
வெளிநாட்டு தலைவர் ஒருவருக்கு ஜப்பான் பிரதமர் இல்லத்தில் தனிப்பட்ட வகையில் விருந்து உபசரிப்பு நடப்பது இதுவே முதன்முறை என வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.