Published : 25,Oct 2018 04:21 PM

“ஏர்இந்தியா”வை ட்விட்டரில் வறுத்தெடுத்த ப.சிதம்பரம்

P-Chidambaram-troll-Air-India-in-Twitter

தான் ரத்து செய்யாத விமான டிக்கெட்டிற்கு ஏர் இந்தியா ரூ.3,000 ரத்துக்கட்டணம் வசூலித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

ஏர்இந்தியா விமானப்போக்குவரத்துடன் நடந்த நிகழ்வு ஒன்று பற்றி ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளார். அதில், “சனிக்கிழமை டெல்லியிலிருந்து மும்பை செல்வதற்காக ஏர் இந்தியாவில் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன்.

டிக்கெட் வழங்கப்பட்டது. அந்த விமானப் போக்குவரத்தை ஏர்இந்தியா இன்று ரத்து செய்துவிட்டது. நான் டிக்கெட்டை ரத்து செய்யவில்லை. ஆனால் என்னிடம் ரூ.3,000 ஆயிரம் ரத்துக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. வருமானம் ஈட்டும் புதிய வழியை ஏர் இந்தியா கண்டுபிடித்திருக்கிறா?

இதேபோல் 100 டிக்கெட் வழங்கப்பட்டால், ரத்துக் கட்டணம் மூலம் ஏர்இந்தியா எளிதாக ரூ.3 லட்சம் லாபம் ஈட்டிவிடும். சபாஷ்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்