
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் மீது கூர்மையான ஆயுதத்தால் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாகப்பட்டினத்தில் இருந்து ஐதராபாத் நகருக்கு ஜெகன் மோகன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சிலருடன் செஃல்பி எடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது கையில் ரத்தம் வரும் அளவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. விமான நிலையத்திலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.