Published : 25,Oct 2018 07:01 AM

எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் - முதல்வர் பழனிசாமி

we-are-ready-to-face-Elections-says-TN-CM-edappadi-Palanisamy

இடைத்தேர்தல்கள் எப்போது வந்தாலும், அதனை சந்திக்க தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று  நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு அளித்துள்ளார். சபாநாயகர் உத்தரவில் எவ்வித தவறும் இல்லை. சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். நீதிபதி சத்தியநாராயணா தமது தீர்ப்பில், “18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கம். எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் சட்டவிரோதம் இல்லை ” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது தீர்ப்பு குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நல்லாசியால் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. நாங்கள் இடைத்தேர்தல்களுக்கு தயாராகவே இருக்கிறோம். தேர்தலை அதிமுக சந்திக்கும். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தேர்தல் நடைபெறுவது என்பது தேர்தல் ஆணையத்தின் கைகளில் உள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் தேர்தல் குறித்து எங்களால் கருத்து சொல்ல இயலாது” என தெரிவித்தார்.

இதனிடையே, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பால் அதிமுகவுக்குதான் இழப்பு  என்று கூறியுள்ள  திவாகரன், ஜெயலலிதா வென்றெடுத்த 18 தொகுதிகளை அதிமுக இழந்துள்ளது என்றார். மேலும், டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்