முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், ஒபாமா ஆகியோர்களின் வீடுகளுக்கு முன் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் நியூயார்க்கின் சபாக் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் அவர்களின் வீட்டுக்கு முன்பு சக்திவாய்ந்த வெடிகுண்டை பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர். வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சமயம் பில்கிளிண்டனும், ஹிலாரியும் வீட்டில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு சக்திவாய்ந்தவை என்றும், மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு எப்படி வெடிகுண்டு வந்தது, இதற்கு பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
(கைப்பற்றப்பட்ட தபால் வெடிகுண்டு)
இந்நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக முன்னாள் அதிபர் ஒபாமா வீட்டிற்கும் தபாலில் வெடிகுண்டு அனுப்பப்பட்டுள்ளது. தபாலில் வந்த வெடிகுண்டை பாதுகாப்பு அதிகாரிகளை கைப்பற்றி செயலிழக்கச்செய்தனர். முன்னாள் அதிபர்கள் வீடுகளில் அடுத்தடுத்து வெடுகுண்டு பார்சல்கள் கைப்பற்றப்பட்டது அமெரிக்க மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ர்ம்ப், ''வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் அருவருக்கத்தக்க செயல். எந்த வகையிலும் பயங்கரவாதம் நுழைவதை அமெரிக்கா அனுமதிக்காது. அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எனது அரசின் முக்கிய குறிக்கோள்'' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மெலானியா டிரம்ப் , ''வெடிகுண்டு அனுப்பப்பட்டது ஒரு கோழைத்தனமான செயல்'' என தெரிவித்தார்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்