[X] Close

விமானத்தில் அத்துமீறிய இளைஞர்.. உஷாரான இளம்பெண்..!

sexual-harassment-in-flight--one-arrested

விமானத்தில் சக பயணிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

பாங்காக்கில் இருந்து மும்பை நோக்கி பறந்த விமானம் ஒன்றில் பயணிகள் பலர் பயணித்துள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் விமானத்தின் விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் தன்னுடன் பயணித்த சக பயணி ஒருவரை இளைஞர் ஒருவர் அத்துமீறி தொடக் கூடாத இடங்களில் தொட்டுள்ளார். இதனையடுத்து உஷாரான அந்தப் பெண் சத்தம் போட்டு விமான பணிப்பெண்களை அழைத்துள்ளார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அந்த நபரை சிஐஎஸ்எஃப் வீரர்கள் கைது செய்தனர்.

Read Also -> 10 மாதம் காத்திருந்து குழந்தையை காண முடியாமலே உயிரிழந்த ராணுவ வீரர்..!


Advertisement

விசாரணையில் அவர் மும்பையை சேர்ந்த சந்திர திருப்பதி என்பதும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read Also -> சிபிஐ இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமனம்


Advertisement

இதனிடையே தன் மீது குற்றச்சாட்டுகளுக்கு திருப்பதி மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வேண்டுமென்று செய்யவில்லை தெரியாமல்தான் நடந்துவிட்டதாக திருப்பதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விடுமுறை கொண்டாட்டத்திற்கு பாங்காக் சென்ற நிலையில் பாலியல் வழக்கில் திருப்பதி மாட்டிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close