Published : 23,Oct 2018 02:40 PM

அடுத்த வருசம் ‘விஸ்வாசம்’ தல பொங்கல் கன்ஃபார்ம்

Ajith-completes-dubbing-for-Viswasam--

‘விஸ்வாசம்’ படத்தின் டப்பிங் வேலையை அஜித் முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அஜித் ரசிகர்களால் தினமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்படும் திரைப்படம் ‘விஸ்வாசம்’. அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதல் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஏதாவது ஒரு செய்தியை தேடிப்பிடித்து பரபரப்பாக்கி வருகிறார்கள். நான்காவது முறையாக இயக்குநர் சிவா, நடிகர் அஜித்துடன் இணைந்திருப்பதால் அதிகமான எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவாகியுள்ளது. 

இப்படம் வரும் ஆண்டு பொங்கல் அன்று திரைக்கு வரும் எனப் பரவலான கருத்து உலவியது. அதற்கு ஏற்ப படப்பிடிப்பை வேகப்படுத்தி வந்தது படக்குழு. ஆனால் பொங்கலுக்கு இப்படம் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றே சிலர் தகவல் தெரிவித்தனர். ஏனெனில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ அடுத்த வருட பொங்கல் விருந்தாக வர உள்ளதால் அஜித்தின் ‘விஸ்வாசம்’ மேலும் தள்ளி போகலாம் என்றார்கள். 

இப்படத்தில் அஜித் இரு வேடங்களில் நடித்து வருகிறார். முதலில் அஜித்தின் வயதான தோற்றம் படமாக்கப்பட்டது. அடுத்து இளம் அஜித்திற்கான பகுதியும் நயன்தாரா பகுதியும் காட்சியாக்கப்பட்டன. 

இந்நிலையில் அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் முழுவதையும் முடித்து கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றை படக்குழு மும்பையில் காட்சிப்படுத்தியுள்ளது. அதனையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக போய்க் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகவே இப்படம் பொங்கலுக்கு நிச்சயம் வெளியாகும் என்று திரை வட்டாரத்தில் செய்தி கசிந்து வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்