Published : 23,Oct 2018 04:59 AM

போதையில் மோசமான நடத்தை: மகனின் கழுத்தை நெரித்துக் கொன்றார் அம்மா!

U-P--MLC-s-wife-confesses-of-killing-her-son

போதையில் மோசமாக நடந்து கொண்ட மகனை கழுத்தை நெரித்துக்கொன்ற அம்மா கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேச சட்ட மேலவை தலைவராக, சமாஜ்வாதி கட்சியின் ரமேஷ் யாதவ் உள்ளார். இவரது இரண்டாவது மனைவி மீரா. இவர்களது இரண்டாவது மகன் அபிஜித் (22). கடந்த 20ம் தேதி இரவு அபிஜித் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர்.

Read Also -> பாதுகாப்பு அதிகாரியால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் இன்று மரணம்!

'குடிபோதையில் வீட்டுக்கு வந்த அபிஜித், மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அவரது அம்மா மீரா போலீசில் தெரிவித்திருந்தார். உடற்கூராய்வு வேண்டாம் என்று அவர்கள் கூறியதால், இறுதிச் சடங்கு செய்ய உடலை எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.
 இதையடுத்து இறுதி சடங்கு முடிந்து உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார், பாதி வழியில் மறித்து உடலை எடுத்துச் சென்றனர். பின்னர் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதில், அபிஜித் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் மீராவிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது மகனின் கழுத்தை நெரித்துக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். 

'குடி போதையில், மோசமாக நடந்து கொண்டதால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டேன்' என விசாரணையில் தெரிவித்தார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டார். 

‘ மகனின் மரணம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. எதற்காக இப்படி நடந்தது என்பதும் தெரியவில்லை’ என்றார் ரமேஷ் யாதவ். மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்