[X] Close

'பெண்கள் கரும்பாக இல்லாமல் இரும்பாக இருக்க வேண்டும்' தமிழிசை

Tamilisai-Soundararajan-speak-about----Metoo----in-Chennai-Airport

‘Metoo’ பெண்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என  தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  


Advertisement

சென்னை விமான நிலையத்தில் இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “காங்கிரஸ் கட்சியுடன் யார் கூட்டணி வைத்தாலும் கூட்டணி மூழ்கிப்போகும். இனிவரும் எந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் தாக்கத்தை ஏற்படுத்தாது” என்றார். மேலும் திமுகாவின் நாடாளுமன்ற தொகுதிக் பொறுப்பாளர்கள் அறிவிப்பு பற்றிய கேள்விக்கு “எங்களைக் காட்டிலும் நாடாளுமன்ற பணிகளை திமுக தாமதமாக தொடங்கியுள்ளது.  தமிழக பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதம் முன்பாகவே பொறுப்பாளர்கள், அமைப்பாளர்களை நியமித்துவிட்டது” என்றார்.


Advertisement

இதனைதொடர்ந்து பேசிய அவர், நரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள், எனவே மீண்டும் அவர்தான் வேட்பாளரா என்பதை கட்சி முடிவு செய்யும் என்று கூறினார். மேலும் Metoo சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள்,  ‘Metoo’ பெண்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. சினிமா துறையில் கமிட்டி அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. எந்த ஒரு சிறு புகார் வந்தாலும் அதை விசாரிக்க வேண்டும் அது தான் நல்ல தீர்வாக இருக்கும் என தமிழிசை  தெரிவித்தார்.


இதனிடையே  “பெண்கள் கரும்பு என்பதால் சுவைத்து பார்க்க நினைக்ககூடாது; பெண்கள் கரும்புத் தன்மையோடு இருக்கிறார்களா ? இல்லை இரும்புத் தன்மையோடு இருக்கிறார்கள் என்று நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை " சபரிமலை விவகாரத்தில் ரஜினி தீர்ப்பை வரவேற்றிருந்தாலும் தீர்வையும் சொல்லி இருக்கிறார். ஐதீகத்தை மாற்ற நினைக்கக் கூடாது என அவர் கூறியதை நான் வரவேற்கிறேன்” என  தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன்  கூறினார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close