[X] Close

பாலியல் புகார்: நடிகர் அர்ஜுனுக்கு கன்னட நடிகர் சங்கம் ஆதரவு, பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு!

Sruthi-Hariharan---s--MeToo-story-receives-support-from-Prakash-Raj

நடிகையின் பாலியல் புகார் விவகாரத்தில் நடிகர் அர்ஜுனுக்கு கன்னட நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் நடிகர் பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் ரீதியான பிரச்னைகளை பெண்கள் ’மீ டூ’ என்ற ஹேஷ்டேக் மூலம் இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தினமும் பல புகார்கள் வெளிவந்து அதிர்ச்சி அளித்து வருகிறது.


Advertisement

நடிகை, தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது புகார் கூறினார். இதைத் தொடர்ந்து கங்கனா ரனவத், குயின் இயக்குனர் மீது பாலியல் புகார் சொல்ல, இது தொடர்பான புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மேலும் சிலரும் அவர் மீது புகார் கூறினர்.

ஆவணப்பட இயக்குனர் லீலா மணிமேகலை, இயக்குனர் சுசி கணேசன் மீது குற்றஞ்சாட்டினார். இதற்கு மறுப்புத் தெரிவித்த அவர், லீனா மீது வழக்குத் தொடுத்துள்ளார். இந்நிலையில், தமிழில், ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ’நிலா’, ’நிபுணன்’ படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அர்ஜுன் மீது அத்துமீறி நடந்து கொண்டதாக, மீ டூவில் கூறியுள்ளார். 

ஸ்ருதி ஹரிஹரன் தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்தில், ’2016 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜுனுடன் இருமொழியில் தயாரான படமொன்றில் (நிபுணன்) நடித்துக் கொண்டிருந்தேன். அவர் படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போது மகிழ்ச்சி அடைந்தேன். எங்களுக்கு இடையே ரொமான்டிக் காட்சி படமாக்கப்பட்டது. இருவரும் கட்டிப் பிடிக்க வேண்டியிருந்தது. அப்போது ஒத்திகை யின் போது, நாங்கள் எங்கள் வசனங்களை பேசிப் பார்த்தோம். அர்ஜுன் என்னை கட்டிப்பிடித்தார். முன்கூட்டியே எதுவும் சொல் லாமல், கட்டிப் பிடித்தவாறு என் முதுகில் கைகளால் மேலும், கீழும் தடவினார். என் உடலோடு மிகவும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டார்.

உடனடியாக இயக்குநரிடம் இப்படியொரு காட்சி இருக்கிறதா எனக் கேட்டேன். பதில் இல்லை. நடப்பதை நினைத்து திகிலுற்றேன். சினிமாவின் இது யதார்த்தம் என்பதை உணர்ந்தேன். இது தவறு என்பதையும் உணர்ந்தேன். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கோபமாகதான் இருந்தது. என்னுடைய இக்கட்டான சூழ்நிலையை இயக்குநரும் உணர்ந்திருந்தார். நடந்ததை நான் வேறு யாரிடமும் சொல்லவில்லை. மேக் அப் அறை டீமில் மட்டும் சொன்னேன். படப்பிடிப்பில் 50 பேர் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்தது’ என்று பரபரப்பு புகார் கூறியிருந்தார். இதை நடிகர் அர்ஜுன் மறுத்திருந்தார்.

ராக்லைன் வெங்கடேஷ் ஆதரவு

இந்நிலையில், நடிகரும் கன்னடத் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷ் அர்ஜுனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழில் இவர், விக்ரம் நடித்த ’மஜா’, ரஜினி நடித்த ’லிங்கா’ படங்களைத் தயாரித்தவர். நாச்சியார் படத்திலும் நடித்தவர். இவர் கன்னட நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.


‘ஸ்ருதி, புகார் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. ஏதாவது நடந்தால் உடனடியாக அதற்கு எதிர்ப்பை தெரிவித்திருக்க வேண்டும். அந்தப் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு அப்போது நடந்த போதே இவர் தெரிவித்திருக்கலாமே? நடிகர் அர்ஜுன் சிறந்த நடிகர். கதைக்கு தேவை என்றால் அதை செய்திருப்பார். அவ்வளவுதான்’ என்றார். 

அர்ஜுன் மன்னிப்புக் கேட்கணும்: பிரகாஷ் ராஜ் 

இதுபற்றி பிரகாஷ் ராஜ் கூறும்போது, ‘அர்ஜுன் மூத்த நடிகர். பாலியல் புகார் கூறியுள்ள அந்தப் பெண் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தனக்குள் ளேயே வைத்திருந்து இப்போது வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது வலி புரிகிறது. நடிகர் அர்ஜுன் மன்னிப்புக் கேட்க வேண்டும். அது அவரது பெருந்தன்மையைக் காட்டும்’ என்று கூறியுள்ளார்.


 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close