இந்திய மண்ணை அடைய ஆசைப்படுபவர்களுக்கு இரு மடங்கு வலிமையுடன் பதிலடி தருவோம் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆசாத் ஹிந்த் அமைத்ததன் 75வது ஆண்டை நினைவு கூறும் விதமாக டெல்லியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றி வைத்தார். சுதந்திர தினம் அல்லாத ஒரு நாளில் பிரதமர் ஒருவர் செங்கோட்டையில் கொடியேற்றுவது இதுவே முதல்முறை.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியா எந்த நாட்டு மண்ணுக்கும் ஆசைப்படவில்லை என்றும், அதுதான் நமது பாரம்பரியம் என்றும் குறிப்பிட்டார். இந்திய ராணுவத்தை பலப்படுத்த நவீன ரக ஆயுதங்கள் வாங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கனவுகளை நனவாக்க தமது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின்போது நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தினர் பயன்படுத்திய தொப்பி பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது. நேதாஜியின் நெருங்கிய நண்பர் ஒருவர் அத்தொப்பியை பிரதமருக்கு வழங்கினார். அந்த தொப்பியை அணிந்தவாறு பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!