Published : 21,Oct 2018 10:03 AM

உயிர் நீத்த காவலர்களுக்கு பிரமாண்ட நினைவகம் - பிரதமர் திறந்து வைத்தார்

-Grateful-Nation-Pays-Tribute---PM-Inaugurates-Police-Memorial--Museum

பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக டெல்லியில் பிரமாண்ட நினைவகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

டெல்லி சாணக்கியபுரி பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட அருங்காட்சியகத்தில் பணியில் உயிர் நீத்த 34 ஆயிரத்து 800 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முன்னதாக பிரதமர் மோடி, காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கான நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். 

         

1959ம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநில லடாக் பகுதியில் பதுங்கியிருந்த சீனப் படையினர் நடத்திய தாக்குதலில் மத்திய படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

   

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராணுவம் நவீனமயமாக்கப்படும் என்று கூறினார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்