நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் நூலிழையில் பெரும் விபத்தில் இருந்து தப்பின.
கொல்கத்தாவில் இருந்து டார்ஜிலிங்கில் உள்ள பக்தோக்ரா விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் கடந்த திங்கட்கிழமை பறந்துகொண் டிருந்தது. இந்த விமானம், 29 ஆயிரம் அடி உயரத்தில் பறக்குமாறு கூறப்பட்டிருந்தது. அப்போது பக்தோக்ரா விமான நிலையத்தில் இருந்து கொல் கத்தாவுக்கு ஏர் ஏசியா விமானம் வந்துகொண்டிருந்தது. இந்த விமானமும் அதே உயரத்தில் பறந்தது.
(கொல்கத்தா விமான நிலையம்)
இந்த விமானங்கள் ஒரே பாதையில் எதிர் எதிரில் வந்துகொண்டிருந்தன. இந்நிலையில் எதிரில் விமானம் வருவதையும் விபத்து ஏற்பட இருப்ப தையும் உணர்த்தும் எச்சரிக்கை கருவி இரண்டு விமானங்களிலும் ஒலித்தது. உஷாரான விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை மாற்றுப் பாதையில் இயக்கினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரண்டு விமானங்களிலும் இருந்த சுமார் 350 பயணி கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரேடார் டேட்டா, விமானிக்கும் விமானக்கட்டுப்பாட்டு அதிகாரிக ளுக்குமான உரையாடல் பதிவு ஆகியவற்றை ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு உட்படுவதாக, ஏர் ஏசியா விமான நிறுவனமும் இண்டிகோ விமான நிறுவனமும் கூறியுள்ளன.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்