Published : 20,Oct 2018 12:24 PM

“ஆண்களே! எங்களுக்கு துணை நில்லுங்கள்”  - கையெடுத்து கும்பிட்ட சின்மயி

singer-Chinmayi-Press-Meet-Metoo-Issue

இந்தப் பிரச்னையில் ஆண்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என்றுதான் கெஞ்சுகிறோம் என பாடகி சின்மயி கூறியுள்ளார்.

பாடகி சின்மயி, கவிஞர் லீனா மணிமேகலை, நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சின்மயி உள்ளிட்டோருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சின்மயி, “யாரிடம் எப்படி புகார் அளிப்பது என்று இதுவரை எனக்கு தெரியவில்லை. மும்பை, ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள சினிமா துறை பெண்கள் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். உடனடியாக புகார் அளிக்க வேண்டிய தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரியை கொடுத்துள்ளனர். 

    

தயவு செய்து கேட்கிறேன் நிறுத்திக் கொள்ளுங்கள். இவ்வளவு நாட்களுக்கு பிறகு இத்தனை பெண்கள் சொல்லி இருக்கிறார்கள். போகிற போக்கில் எல்லோரையும் அசிங்கப்படுத்த நாங்கள் இங்கே வரவில்லை. எங்களுக்கு கதை இருக்கிறது. நாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறோம். ஆண்களே எங்கள் உடன் இருங்க என்றுதான் கெஞ்சுகிறோம். 

கட்டாயம் வழக்கு தொடுப்பேன். நான் சுவிட்சர்லாந்து சென்று வந்த வருடம், தேதி என்ன என்பது பாஸ்போர்ட்டில் இருக்கிறது. அந்த நிகழ்ச்சி நடந்ததற்காக ஆதாரம் அந்த பாஸ்போர்ட் மட்டும்தான். அந்த பாஸ்போர்ட் எங்கு இருக்கிறது என தேடிக் கொண்டிருக்கிறேன். அது கிடைத்ததும் வழக்குப் போடுவேன்.

      

கடந்த 15 ஆண்டுகளில் 10 வீடுகள் மாறிவிட்டோம். அதனால், எளிதில் அதனை எடுக்க முடியவில்லை. எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டுதான் இருக்கிறேன். வழக்குப்போடுவதற்கான பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

 

சும்மா மீடூவில் ஒரு கருத்தினை பதிவு செய்துவிட்டு மட்டும் போக மாட்டேன். சட்டபூர்வமாக அணுகுவேன்” என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்