துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சகோதரர் மருத்துவ உதவிக்காக பயன்படுத்திய ஹெலிகாப்டர் செலவை வழங்கி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க அனுமதி கோரி இருந்தார். நிர்மலா சீதாராமனை சந்திக்கதான் டெல்லி வந்ததாகவும், தனது சகோதரர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றபோது, ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை தந்து உதவியதற்காக நன்றி தெரிவிக்கவே வந்ததாகவும் ஓ.பி.எஸ் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என சர்ச்சை எழுந்தது. ஹெலிகாப்டர் விவகாரத்தை வெளிட்டதால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோபமடைந்ததாக கூறப்பட்டது. பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என மத்திய அமைச்சரே முன் வந்து ட்விட்டரில் விளக்கம் அளித்திருந்தார். எனவே ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார் பன்னீர்செல்வம்.
அப்போது இது குறித்து விமான நிலையத்திலுள்ள செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், “எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா கூறியிருக்கிறார்” என்று ஒருவரியில் பதிலளித்துவிட்டு விடை பெற்றார்.
மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது சகோதரர் பாலமுருகனை உடனடியாக சென்னை கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியிருந்தனர். அப்போது, இரண்டு தனியார் விமான ஆம்புலன்ஸை ஓ.பன்னீர்செல்வம் முதலில் அணுகினார். ஆனால், உடனடியாக வரமுடியாத சூழலில் இருப்பதாக தனியார் விமானங்கள் கூறிவிட்டன.
அந்தச் சூழலில் பெங்களூருவில் இருந்து ராணுவ விமான ஹெலிகாப்டர் உடனடியாக ஒரு மணி நேரத்தில் மதுரை விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டது. பேரிடர் காலத்தில் மட்டுமே ராணுவ விமானம் பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில், பாதுகாப்பு விதிகளை தளர்த்தி ஓபிஎஸ் சகோதரருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் தனது சகோதரர் மருத்துவ உதவிக்காக வழங்கப்பட்ட ஹெலிகாப்டர் சேவைக்கான கட்டணத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான மொத்த தொகை 14 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயை அவர் தமிழக அரசின் மூலம் ராணுவ விமான நிலைத்திற்கு வழங்கியுள்ளார். இவரது சகோதரருடன் இணைந்து உறவினர் இருவரும் இரண்டு ராணுவ அதிகாரிகளும் பயணித்ததற்கான மொத்த தொகையாக இந்தத் தொகை கணக்கிடப்பட்டுள்ளது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai