தனக்கு துரைமுருகனின் நடிப்பு பிடிக்காது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியில் பேசி வருகிறோம். சினிமாவில் நடித்திருப்பதால் மக்களுக்கு என்னைத் தெரியும். நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றும், மக்களின் குறைகளை கேட்டுக்கொண்டும் இருக்கிறோம். நாங்கள் கடக்கும் பாதை என்ன என்பதையும், தேவைகள் என்ன என்பதையும் மக்களிடம் கேட்கிறோம். காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து இப்போது சொல்ல முடியாது.
நான் இதுவரை ஐயப்பன் கோயிலுக்கு சென்றதில்லை, அதுகுறித்து என்னிடம் கருத்து கேட்பது அவ்வளவு சரியாக இருக்காது. நாட்டுக்கு எது நல்லதோ, பெண்களுக்கு எது நல்லதோ அதை தான் சொல்வேன். பக்தர்களின் சார்பு எனக்கு புரியாது. அதில் தலையிடாமல் இருப்பது தான் நல்லது. கர்நாடகாவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்கவில்லை. கேரளாவில் மக்கள் மதிக்கவில்லை. அமைச்சர் ஜெயக்குமாருக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. எனக்கு துரைமுருகனின் நடிப்பு பிடிக்காது அதற்கென்ன செய்வது?” என்று கூறினார். சில தினங்களுக்கு முன்னர் “கமல்ஹாசன் நடிப்பு எனக்கு பிடிக்கும். ஆனால் அவருக்கு அரசியல் அனுபவம் போதாது” என திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, ஐயப்பன் கோயில் விவகாரத்தில் பெண்களின் உரிமையில் பறிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு ஒருவரின் உணர்வுகள் புரியாமல் அவரை புண்படுத்த கூடாது என கமல் பதிலளித்தார். மேலும் அமைச்சர்கள் உங்களையே விமர்சிக்கிறார்களே? என்ற கேள்விக்கு, அதற்கு பதட்டம் தான் காரணம் எனவும் அவர் விடையளித்தார்.
Read Also -> முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்