[X] Close

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று வேலை நிறுத்தம்

tamilnadu-strikes-on-behalf-of-farmers

டெல்லியில், தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் இன்று வேலை நிறுத்தம் நடக்கிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில், 21-வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். தி.மு.க, அ.தி.மு.க பன்னீர்செல்வம் அணி, காங்கிரஸ், த.மா.கா, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், இன்று, தமிழகத்தில் கடையடைப்பு நடைபெறும் என்றும் சுமார் 60 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close