இந்தியா வந்தார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இந்தியா வந்தார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
இந்தியா வந்தார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லி வந்துள்ளார். இந்தியாவில் மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை அவர் மேற்கொள்கிறார். 

டெல்லி விமான நிலையம் வந்தடைந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கு வெளியுறவுதுறை உயரதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்நிலையில் தன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பான ரா முயற்சிப்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியதாக தகவல் வெளியானது. அதை ரணில் திட்டவட்டமாக மறுத்ததுடன், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசி விளக்கம் அளித்தார். இந்தச் சூழலில் இலங்கை பிரதமர் இந்தியா வந்துள்ளார்.

தனது மூன்று நாள் பயணத்தின் போது சனிக்கிழமை பிரதமர் மோடியை ரணில் விக்ரமசிங்கே சந்திக்கிறார். 2015 ஆம் பிரதமராக பதவியேற்ற பின்னர், ரணில் விக்கிரமசிங்கே 5வது முறைய இந்தியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com