தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இன்றும் சில இடங்களில் தூரலும், மேக மூட்டமாய் காணப்படுகின்றது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் ஸ்டெல்லா, “வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைபெய்யும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளது. வரும் 20ம் தேதி தென்மேற்கு பருவமழை இந்தியா முழுவதும் முழுமையாக நிறைவுபெறும். வளிமண்டலத்தில் காற்றின் மேல்அடுக்கு சுழற்சி தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.
இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்த வரை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, வேலூர் மாவட்டத்தில் 7 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 6 செ.மீட்டர் மழையும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 5 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்