மனசாட்சியே இல்லாமல் செல்போனுக்காக முதியவரை தரதரவென இழுத்த இளைஞர்கள்..!

மனசாட்சியே இல்லாமல் செல்போனுக்காக முதியவரை தரதரவென இழுத்த இளைஞர்கள்..!
மனசாட்சியே இல்லாமல் செல்போனுக்காக முதியவரை தரதரவென இழுத்த இளைஞர்கள்..!

சென்னை வளசரவாக்கத்தில் மனசாட்சியே இல்லாமல் முதியவரவை தரதரவென இழுத்தப்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். 66 வயதான இவர் வெல்லம் வியாபாரி ஆவார். இவர் வளசரவாக்கத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திரும்பிய நிலையில் சாலையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் அவரிடம் குறிப்பிட்ட இடத்தை சொல்லி முகவரி கேட்பது போல் கேட்டுள்ளனர். அதற்கு அந்த முதியவரும் பதில் சொல்ல முற்படுகையில் அந்த முதியவரின் சட்டை பையில் இருந்த செல்போனை நைசாக பிடுங்கிய அந்த இளைஞர்கள் அதன்பின் சிறிதும் தாமதிக்காமல் வந்திருந்த இருசக்கர வாகனத்தில் விரைந்து பறக்க ஆரம்பித்தனர்.

ஆனால் செல்போனை பறிகொடுத்த முதியவர் எப்படியாவது தனது செல்போனை மீட்டுவிட வேண்டும் என அவர்களிடம் போராடியுள்ளார். இதற்காக அந்த இளைஞர்களின் இருசக்கர வாகனத்தை பிடித்து தொங்கியுள்ளார். ஆனால் அந்த இளைஞர்கள் சிறிதும் கூட மனசாட்சி இல்லாமல் அந்த முதியவரை தரதரவென தரையில் இழுத்துச் சென்றபடி வேகமாக பறந்துவிட்டனர். செல்போனை மீட்க முயற்சித்த முதியவருக்கு காயம் மட்டுமே ஏற்பட்டது.

இதுதொடர்பாக ஜெயபாண்டியன் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன்பேரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்களை விருகம்பாக்கத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் 12-ஆம் வகுப்பு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் எவ்வளவோ பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட போதிலும், சிசிடிவி கேமராக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள போதிலும் கொள்ளை சம்பவங்கள் தொடர்கதையாகி தான் வருகின்றன. பெரும்பாலான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்கள் இளைஞர்களாக இருப்பது மேலும் வருத்தத்தக்க சம்பவமாகவே அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com