திருட்டு சம்பவங்களில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை கைது செய்யும்போது திருடர்கள் என நினைத்து காவலர்கள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்ம் ரத்தினகிரி அடுத்த மலைக்கிராமமான மேலக்குப்பத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து ஜோதிடம் பார்த்து வருபவர் ராமகிருஷ்ண ஆச்சார்யா. இவர் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தர்மாவரம் கிராமத்தை சேர்ந்தவர். தர்மாவரம் கிராம எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் வழிப்பறி,கொள்ளை, வீட்டின் பூட்டை உடைத்து திருடுவது போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். இது போன்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் ஆச்சார்யா தமிழகத்திற்கு ஓடி வந்துள்ளான். அவ்வப்போது ஆந்திராவிற்கு சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு பின்னர் தமிழகத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவனது செல்போன் எண் மூலம் அவனை பிடிக்கும் முயற்சியில் ஆந்திர போலீசார் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் ரத்தினகிரி அடுத்த மலைக்கிராமமான மேலகுப்பத்தில் அவனது செல்பொன் சிக்னல் இருப்பதை அறிந்த ஆந்திர போலீசார், உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தமிழகம் வந்துள்ளனர். அப்போது வேலூரை சேர்ந்த ராமகிருஷ்ண ஆச்சார்யாவின் நண்பரின் உதவியுடன் அவனது இருப்பிடத்திற்கு சென்று மடக்கிப்பிடித்தனர். இதனை தொடர்ந்து ரத்தினகிரி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளியான ராமக்கிருஷ்ண ஆச்சார்யாவை ஆந்திராவிற்கு அழைத்து செல்ல வழிமுறைகளை மேற்கொண்டனர். பின்னர் ஆந்திரா அழைத்து சென்றனர். பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையன் ஜோதிடம் பார்ப்பது போன்ற போர்வையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக மலைக்கிராமத்தில் வசித்து வந்தது அப்பகுதிவாசிகளிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளி ராமகிருஷ்ணனை பிடிக்க ஆந்திர காவல் துறையினர் பொதுமக்களை போன்று மலை கிராமத்தில் சுற்றி வந்த போது ஆந்திர காவல் துறையினரை அப்பகுதி மக்கள் திருடர்கள் என நினைத்து சரமாரியாக தாக்கி கடப்பாரையால் குத்த சென்றுள்ளனர். ஆச்சார்யாவைப் பிடிக்க கிராமத்தில் சுற்றித் திரிந்தபோது, திருடர்கள் என நினைத்து ஆந்திர காவலர்கள் மீது கிராம மக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 காவலர்களுக்கு சிறு காயம் ஏற்ப்பட்டது. பொது மக்களின் தகவலை அடுத்து சம்பவ இடத்திர்க்கு வந்த ரத்தினகிரி காவல் துறை விசாரணை மேற்க்கொண்ட போது தான் அடி வாங்கியவர்கள் ஆந்திர காவல் துறையினர் என்றும் இங்கு குற்றவாளியை பிடிக்க வந்துள்ளதும் தெரியவந்தது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!