[X] Close

பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு.. சிசிடிவியில் வெளிவந்த அதிர்ச்சியான உண்மை..!

Man-dead-in-accident--shocking-CCTV-footage

சென்னையில் ஹான்ஸ் என்னும் புகையிலைப் பொருளை கேட்டு இளைஞர் ஒருவரை இருவர் அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்ற மாநகரப்பேருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றது. இதுகுறித்து விசாரணை நடத்திய போது விபத்தில் சிக்கிய இளைஞரை ஹான்ஸ் என்னும் புகையிலைப் பொருளை கேட்டு இருவர் அடித்து உதைத்ததும், அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவரும் போது பேருந்தில் சிக்கி அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.

Read Also -> பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு.. சிசிடிவியில் வெளிவந்த அதிர்ச்சியான உண்மை..! 


Advertisement

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள எழும்பூர் காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் தேவன் மற்றும் மெக்கானிக் கமல் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இருவரும் மதுபோதையில் இளைஞரிடம் ஹான்ஸ் கேட்டு அடித்து உதைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞரிடம் இருந்து பணம் பறிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை. வடமாநில இளைஞர் போல் காணப்படும் அவரிடம் மத்தியப் பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயில் டிக்கெட் மட்டுமே உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close