இந்தியாவில் #MeToo பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியதைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை இந்த ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர். நடிகை கங்கனா ரனவத், குயின் இயக்குனர் மீதும் நடிகை புளோரா தயாரிப்பாளர் மீதும் புகார்களை கூறினர். இந்திய பட இயக்குனர் சஜித் கான் மீதும் புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து ஹவுஸ்புல் 4 படத்தில் இருந்து நானா படேகர், இயக்குனர் சஜித் கான் விலகினர். தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
இந்நிலையில், #MeToo புகார் தொடர்பாக விசாரிக்க 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப் படும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
’தமிழ்த்திரைத்துறையில் இப்புகார்களை விசாரிக்க, 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்’ என்று நடிகர் விஷால் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கன்னட சினிமாவில் உரிமை மற்றும் சமத்துவத்துக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பில் பாலியல் தொல் லைக் குறித்து விசாரிக்க குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் நடிகர் சேதன் குமார், நடிகைகள் பிரியங்கா உபேந்திரா, ஸ்ருதி ஹரிஹரன், இயக்குனர் கவிதா லங்கேஷ் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட நடிகர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து கர்நாடக பிலிம் சேம்பர் தலைவர் சின்னி கவுடாவிடம் மனு கொடுத்தனர்.
இதுபற்றி சேதன் குமார் கூறும்போது, ‘பாலியல் தொல்லைகள் குறித்தும் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் பற்றியும் நீதிமன்றத்துக்கு செல்லும் முன் இந்தக் குழு முதலில் விசாரிக்கும்’ என்றார். இந்தக் குழு பாலி யல் விஷயங்களை மட்டுமல்லாமல், நடிகைகளின் சம்பள பிரச்னை உள்ளிட்ட புகார்கள் குறித்தும் விசாரிக்கும் என்று கூறப் பட்டுள்ளது.
‘இந்தக் குழுவை எப்படி அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வது என்பது பற்றி வரும் 26ஆம் தேதி பேசி முடிவெடுப்போம்’ என்றார் கர்நாடக பிலிம்சேம்பர் தலைவர் சின்னி கவுடா.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!