[X] Close

மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக ரூ.5 லட்சத்துடன் வாலிபர் தப்பி ஓட்டம்

The-young-man-escaped-with-Rs-5-lakh---police-Investigate

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜய். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு கொடுங்கையூர் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த பாபுலால் என்பவரை சந்தித்த பிறகு நண்பர்களாக பழகினர். பின் அஜய் தான் மகாராஷ்டிராவில் மண்ணெண்ணெய் வியாபாரம் செய்ய வேண்டும் சென்னையிலிருந்து மண்ணெண்ணெய் வாங்கி தருமாறு பாபுலாலிடம் கூறியதாக தெரிகிறது. 


Advertisement

இதையடுத்து பாபுலால் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐ.ஓ.சி நிறுவனத்தில் தனது 10 டேங்கர் லாரி மூலம் மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் அஜய் மற்றும் அவரது நண்பர் யோகேஷ் ஆகியோர் சேர்ந்து 09.10.2018 ஆம் தேதி சென்னை வந்தனர். சென்னை பெரியமேட்டில் உள்ள ராமலட்சுமி ஹோட்டலுக்கு வரவழைத்து பாபுலாலிடம் இருவரும் பேசி உள்ளனர். இத்னைதொடர்ந்து  பாபுலால் ஆட்டோவில் இருவரையும் கொருக்குப்பேட்டை வழியாக தண்டையார்பேட்டை ஐஓசிக்கு அழைத்து சென்றார். அப்போது செல்லும் வழியில் 5 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார் பாபுலால்.ஐஓசி வாசலில் அஜய், யோகேஷை நிறுத்தி விட்டு பில் போட்டு வருவதாக கூறி பாபுலால் உள்ளே சென்றுள்ளார்.


Advertisement

இதனையடுத்து சிறிது நேரத்தில் வேறொரு ஆட்டோவில் பாபுலால் பணத்துடன் ஓடிவிட்டார். அதிர்ச்சியடைந்த அஜய் இது குறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இது எங்களுக்கு வராது பெரியமேடு காவல் நிலையத்திற்கு போங்கள் என்று தண்டையார்பேட்டை போலீசார் அஜய்யின் புகாரை வாங்காமல் அனுப்பி வைத்தனர். பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றால் இது எங்களுக்கு வராது என்று தண்டையார் பேட்டை போலீசாருக்கு என்று புகாரை வாங்காமல் அஜயை அலைகழித்துள்ளனர்.இது பற்றி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து புகாரை ஏன் வாங்காமல் அலைகழிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close