[X] Close

புதிய கண்டுபிடிப்புகள் தேவை: மாணவர்களுக்கு மோடி வலியுறுத்தல்

New-Discoveries-Needed--Modi-urges-students

மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்னைகளுக்குத் தீர்வு காண, தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

29 அமைச்சகங்கள் சந்திக்கும் பிரச்னைகளை டிஜிட்டல் முறையில் தீர்வு காணும் பொருட்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பொறியியல் மாணவர்களிடம் வீடியோ கான்‌பரன்ஸ் மூலம் பிரதமர் உரையாற்றினார். அப்போது, தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடிய அவர், சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அரசுடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண புதிய கண்டுபி‌டிப்புகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மாணவர்களை கேட்டுக்கொண்டார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close