இப்போதெல்லாம் பெண்கள் தாங்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்களை வெளியே சொல்ல பயந்து கொண்டு இருப்பதில்லை. அதுவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்கள் மிகவும் தைரியமாகவே செயல்படுகின்றனர். மேலும் சினிமா பிரபலங்களும் #Metoo என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு நிகழ்ந்த கசப்பான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பரப்புரையிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீத பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதில், “கடந்த 2005 அல்லது 2006-ஆம் ஆண்டாக இருக்கலாம். இலங்கை தமிழர்கள் குறித்த ஒரு பாடல் ஆல்பத்திற்காக சுவிட்சர்லாந்திற்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர். நானும், எனது அம்மாவும் மட்டும் காத்திருக்க வைக்கப்பட்டோம். பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் (அவரின் பெயர் இப்போது ஞாபகத்தில் இல்லை) வந்து வைரமுத்து தங்கியுள்ள ஹோட்டல் அறைக்கு செல்லுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் ஏனென்று கேட்டேன். அவர் ஒத்துழைப்பு கொடுங்கள் எனக் கூறினார். நான் மறுப்பு தெரிவித்தேன். அதற்கு உங்களுக்கு கெரியர் வேண்டாமா? என அவர் எங்களிடம் கேட்டார். அதற்கு நானும், என் அம்மாவும் சேர்ந்து, ‘கெரியர் வேண்டாம். மண்ணும் வேண்டாம்’ என சொல்லிவிட்டு உடனடியாக இந்தியா திரும்பினோம்” எனக் கூறியுள்ளார்.
சின்மயி வைரமுத்து மீது வைத்துள்ள இந்தப் பரபரப்பு புகாருக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?