[X] Close

கங்குலிக்கு கொலை மிரட்டல்

Sourav-Ganguly-gets-death-threat-by-post

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலிக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மிட்னாபூரில் நடைபெறும் கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை காண சிறப்பு விருந்தினராக கங்குலி அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த போட்டியை காண கங்குலி வந்தால், அவர் கொலை செய்யப்படுவார் என கங்குலியின் தாயாருக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பபட்டுள்ளது. ஆலம் என்ற பெயரில் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து கங்குலி சார்பில் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அவர், திட்டமிட்டபடி போட்டிகளைக் காண மிட்னாபூர் செல்ல இருப்பதாகக் கூறியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close