[X] Close

“விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” பிரதமர் மோடி பேச்சு

Doors-of-Banks-Have-Been-Opened-for-Farmers--Says-PM-Modi-in-Haryana

விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

ஹரியானா மாநிலத்தில் பிரிட்டீஸ் ஆட்சியில் வாழ்ந்த விவசாய தலைவர் சர் சோட்டு ராமின் 64 அடி சிலையை இன்று திறந்து வைத்தார். அப்போது, விவசாயிகளுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய மோடி, “விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய தன்னுடைய அரசாங்கம் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறது. அதற்காக விளை பொருட்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் பாதுகாப்பு, நவீன விதைகள் மற்றும் போதுமான யூரியா கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட வழிகளை செய்து வருகிறது. விவசாயிகளுக்காக வங்கிகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” என்றார். 


Advertisement

        

மேலும், அரியானாவில் 66.50 லட்சம் ஜன் தன் வங்கி கணக்குகள் இதுவரை தொடங்கப்பட்டுள்ளதாக மோடி கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close