[X] Close

சென்னையின் வெப்பநிலை கிடுகிடு - ஆய்வில் அதிர்ச்சி..!

-We-Have-To-Put-Out-The-Fire---UN-Sounds-2030-Climate-Change-Warning

சென்னை மாநகரத்தின் சராசரி வெப்பநிலை கடந்த 150 ஆண்டுகளில் 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர புவி வெப்பநிலை உயர்வால் உலகம் எதிர்பார்த்ததை விட அதிக பாதிப்புகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த CARBON BRIEF என்ற அமைப்பு இது தொடர்பாக விரிவான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.


Advertisement

‌தலைநகர் டெல்லியின் சராசரி வெப்பம் ஒரு டிகிரி செல்சியசும் கோல்கத்தாவில் ஒன்று புள்ளி இரண்டு டிகிரி செல்சியசும் மும்பையில் பூஜ்யம் புள்ளி ஆறு டிகிரி செல்சியசும் வெப்பம் உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்ற பிரச்னையே ஒட்டுமொத்த புவிவெப்ப உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் பருவநிலை மாற்ற பிரச்னையின் பாதிப்புகளில் இருந்து தப்ப உலகம் மிகப்பெரிய மாற்றத்தை காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா அமைப்பின் ஒரு அங்கமான ஐபிசிசி எச்சரித்துள்ளது. பல்வேறு நாடுகளின் அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஐபிசிசி குழு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புவி வெப்ப நிலை ஒரு டிகிரி உயர்ந்தாலும் ஆபத்தான புயல்கள், வெள்ளங்கள், வறட்சிகளை உலகம் எதிர்கொள்ளும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் உயரும் பட்சத்தில் இந்த உலகம் மனித இனம் வாழத் தகுதியற்றதாகிவிடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


Advertisement

            

புவி வெப்‌ப உயர்வின் பாதிப்புகள் எதிர்பார்த்ததற்கு முன்பே ஏற்பட உள்ளதாகவும் ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கிடையில் புவி வெப்ப உயர்வால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என டெல்லியைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் இயக்குநர்‌ அஜய் மாத்தூர் தெரிவித்துள்ளார். நாட்டின் தென் பகுதியை 7 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு கடல் சூழ்ந்துள்ளதும் வட கிழக்கு பகுதியை பனி படர்ந்த இமயமலை சூழ்ந்துள்ளதும் பாதிப்புகள் அதிகரிக்க காரணமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close