[X] Close

ரெட் அலர்ட்டில் அரசியலா? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

politics-in-red-alert--Balachandran--Director-Area-Cyclone-Warning-Centre

கடந்த வாரம் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7 ஆம் தேதி அதி கனமழை பெய்யும் எனக் கூறி‘ரெட் அலர்ட்’எச்சரிக்கையை அறிவித்திருந்தது. இதனால், ரெட் அலர்ட் பற்றியே பேச்சு பரலாக இருந்தது. அதற்கேற்ப 4, 5 ஆம் தேதி தொடர்ச்சியாக மழை பெய்தது. அதேபோல், வானமும் தொடர்ச்சியாக இருண்டு, வானிலையில் பெரிய மாற்றம் இல்லாதது போல் இருந்தது. இதனால், அறிவித்தபடி அக்டோபர் 7, 8 தேதிகளில் அதீத கனமழை இருக்கும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவியது. ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை காரணமாக தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.  

ஆனால், அக்டோபர் 6 ஆம் தேதி ‘ரெட் அலர்ட்’ வாபஸ் பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் திடீரென அறிவித்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம்  பேசிய வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், “6 மாவட்டங்களுக்கு விடப்பட்டிருந்த ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது. மீனவர்கள் குமரி, லட்சத்தீவு கடல் பகுதி, மத்திய தென்கிழக்கு அரபி கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். வரும் 8 ஆம் தேதி வரை கனமழை பெய்யும். சென்னை உட்பட ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது” என்று தெரிவித்தார்.

காலை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்டை வாபஸ் பெற்ற நிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் தமிழகத்தில் மழைக்காலம் முடிந்த பிறகு திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைதேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார். 


Advertisement

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு அதிகமாக பருவமழை  பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாக’  குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பருவமழை அறிவிப்பு திட்டமிட்டு அரசுக்கு ஆதரவாக தெரிவிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

‘ரெட் அலர்ட்’ தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதுதொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். கணினி மாதிரி அடிப்படையில், அறிவியல் வழியில் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close