Published : 07,Oct 2018 05:09 PM

‘குஜராத்தை தென்கொரியா போல் மாற்ற நினைத்தேன்’ - பிரதமர் மோடி

Wanted-To-Turn-Gujarat-Into-South-Korea-When-I-Was-Chief-Minister--PM-Modi

தான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தை தென்கொரியா போல் மாற்ற நினைத்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், நமது நாட்டின் மாநிலங்கள் உலகின் பல நாடுகளை விட வலிமையானது என்று கூறினார். உலகில் உள்ள பல சிறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது சாத்தியம் என்றும் அவர் தெரிவித்தார். 2001ஆம் ஆண்டு தான் முதல் முறையாக குஜராத் முதலமைச்சரான போது, அரசாங்கம் என்றால் என்ன? என்ற அனுபவம் தனக்கு இல்லை என்று குறிப்பிட்டார். 

அந்த நேரத்தில் குஜராத்தின் வளர்ச்சியில் தனது திட்டம் என்னவென்று? ஒரு செய்தியாளர் தன்னிடம் கேட்டதாக மோடி கூறினார். பொதுவாக மக்கள், “நீங்கள் குஜராத்தை எப்படி மாற்றப்போகிறீர்கள் என்று யாரிடமாவது கேட்டால், அமெரிக்கா போல் மாற்றப்போகிறேன் அல்லது இங்கிலாந்து போல் மாற்றப்போகிறேன் என்பார்கள். ஆனால் நான் அப்போது தென்கொரியா போல குஜராத்தை மாற்ற நினைப்பதாக, பதிலளித்தேன்” என்று கூறினார். அத்துடன் தென்கொரியாவுடன் ஒப்பிடுகையில் குஜராத் மக்கள் ஒரே எண்ணிக்கை தான் எனக்கூறியதாகவும், அதே வளர்ச்சிப்பாதையில் சென்றால் குஜராத் வளர்ச்சியை தடுக்க முடியாது எனக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். 

(Courtesy : NDTV)

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்