தான் முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தை தென்கொரியா போல் மாற்ற நினைத்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், நமது நாட்டின் மாநிலங்கள் உலகின் பல நாடுகளை விட வலிமையானது என்று கூறினார். உலகில் உள்ள பல சிறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது சாத்தியம் என்றும் அவர் தெரிவித்தார். 2001ஆம் ஆண்டு தான் முதல் முறையாக குஜராத் முதலமைச்சரான போது, அரசாங்கம் என்றால் என்ன? என்ற அனுபவம் தனக்கு இல்லை என்று குறிப்பிட்டார்.
அந்த நேரத்தில் குஜராத்தின் வளர்ச்சியில் தனது திட்டம் என்னவென்று? ஒரு செய்தியாளர் தன்னிடம் கேட்டதாக மோடி கூறினார். பொதுவாக மக்கள், “நீங்கள் குஜராத்தை எப்படி மாற்றப்போகிறீர்கள் என்று யாரிடமாவது கேட்டால், அமெரிக்கா போல் மாற்றப்போகிறேன் அல்லது இங்கிலாந்து போல் மாற்றப்போகிறேன் என்பார்கள். ஆனால் நான் அப்போது தென்கொரியா போல குஜராத்தை மாற்ற நினைப்பதாக, பதிலளித்தேன்” என்று கூறினார். அத்துடன் தென்கொரியாவுடன் ஒப்பிடுகையில் குஜராத் மக்கள் ஒரே எண்ணிக்கை தான் எனக்கூறியதாகவும், அதே வளர்ச்சிப்பாதையில் சென்றால் குஜராத் வளர்ச்சியை தடுக்க முடியாது எனக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
(Courtesy : NDTV)
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்