[X] Close

பிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டேன்; கிடைக்கவில்லை: மு.க.ஸ்டாலின்

No-chance-for-to-Meet-PM-Modi--MK-Stalin

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் வாய்ப்பு கிடைக்வில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் மோடியை சந்திப்பேன் எனவும் கூறினார்.


Advertisement

வறட்சி நிவாரணத்திற்கு அதிகப்படியான நிதி, பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 19-ஆவது நாளாக இன்றும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் போராட்டத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவினை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் பிரச்னைகளை மத்திய, மாநில அரசு கண்டுகொள்ளாதது வேதனையளிக்கிறது. முதலமைச்சர் பழனிசாமி விவசாயிகளை நேரில் வந்து சந்தித்திருக்க வேண்டும். ஆனால் விவசாயிகளின் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் அவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார் என்றார்.


Advertisement

அதிமுக ஆட்சிக் காலத்தில் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், மத்திய குழு வறட்சி நிவாரணம் குறித்து ஆய்வு செய்ய வந்தபோது சரியான தகவலை தமிழக அரசு கொடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். விவசாய பிரதிநிதிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். விவசாயிகள் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடியை தான் சந்திக்க வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close