ஓ.பன்னீர்செல்வம் vs டிடிவி தினகரன் மோதல்: டாப்10 பாய்ண்ட்

ஓ.பன்னீர்செல்வம் vs டிடிவி தினகரன் மோதல்: டாப்10 பாய்ண்ட்
ஓ.பன்னீர்செல்வம் vs டிடிவி தினகரன் மோதல்: டாப்10 பாய்ண்ட்

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னை சந்தித்து அதிமுக குறித்து அதிருப்தி தெரிவித்ததாக டிடிவி தினகரன் கூறியுள்ள நிலையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் மோதல் தொடர்பாக நடந்த 10 தகவல்களை பார்க்கலாம்.

1) அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திக்க துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் - தங்கத்தமிழ்ச்செல்வன் 

2) டிடிவி தினகரனுடனான சந்திப்பு தொடர்பான கேள்வி, கடந்த காலம் ஒன்று - ஓ.பன்னீர்செல்வம்

3) அமமுகவை அதிமுகவில் இணைக்கோரியும், கட்சிகளை இணைத்துவிட்டு நீங்களே முதல்வராக தொடருங்கள் எனவும் தினகரன்தான் தூதுவிட்டார்  - தங்கமணி
4) சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் எவ்வாறு தினகரனை சந்திப்பார்? - தங்கமணி

5) கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி என்னை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்

6) கடந்த வாரம்கூட என்னை சந்திக்க அவர் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வந்தது - டிடிவி தினகரன் 

7) என்னுடன் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை பதவியை விட்டு நீக்க விருப்பம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது - டிடிவி தினகரன்

8) ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் இணையும் எண்ணம் எங்களுக்கு இல்லை - டிடிவி தினகரன் 

9) தினகரன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக கட்டுக்கதைகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார் - கே.பி.முனுசாமி

10) அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த டிடிவி தினகரன் முயற்சி - அமைச்சர் செல்லூர் ராஜூ 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com